வானிலே பறக்கத்
தூண்டும்
காதலும் வேண்டும்
வேண்டும்!
காலனை வெல்லத்
தூண்டும்
காதலும் வேண்டும்
வேண்டும்!
உன்முகம்
பார்க்கையில்
ஏறுதே என் சுவாசம்!
உன்னைநான்
நினைக்கையில்
மாறுதே என் வாசம்!
கோடி கனவு என்தன்
கண்ணில்
கூடி வருதே
கிள்ளத்தான்!
மூடி மறைக்கும்
என்தன் மனது
திறந்து கொள்ளும்
மெல்லத்தான்!
தேடிவா என்னைத்
தேடிவா
என் ஜீவனை எனக்கு
திருப்பித்தா!
வானிலே பறக்கத்
தூண்டும்
காதலும் வேண்டும்
வேண்டும்!
காலனை வெல்லத்
தூண்டும்
காதலும் வேண்டும்
வேண்டும்!
- சுடர்கொடி
No comments:
Post a Comment