Saturday 11 January 2014

காதல் பறவை




வானிலே பறக்கத் தூண்டும்
காதலும் வேண்டும் வேண்டும்!
காலனை வெல்லத் தூண்டும்
காதலும் வேண்டும் வேண்டும்!

உன்முகம் பார்க்கையில்
ஏறுதே என் சுவாசம்!
உன்னைநான் நினைக்கையில்
மாறுதே என் வாசம்!
கோடி கனவு என்தன் கண்ணில்
கூடி வருதே கிள்ளத்தான்!
மூடி மறைக்கும் என்தன் மனது
திறந்து கொள்ளும் மெல்லத்தான்!
தேடிவா என்னைத் தேடிவா
என் ஜீவனை எனக்கு திருப்பித்தா!

வானிலே பறக்கத் தூண்டும்
காதலும் வேண்டும் வேண்டும்!
காலனை வெல்லத் தூண்டும்
காதலும் வேண்டும் வேண்டும்!

- சுடர்கொடி

Tuesday 31 December 2013

புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2014

அனைவருக்கும் வணக்கம்!

முதலில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஆரம்பிக்கிறேன். ட்விட்டர் ஒரு பொழுதுபோக்கு தளம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லைதான் ஆனாலும் இது போதை தரும் பொழுதுபோக்குத் தளம்.

சரி விஷயத்துக்கு வர்றேன்..

எல்லோரும் அவங்களுக்கு விருப்பமான அல்லது உண்மையிலேயே ரசித்த பலருக்கும் விருதுகளை அளித்தும் பெற்றும் மகிழ்வுற்றார்கள். எனக்கும் அவ்வாறு விருது வழங்கவேண்டும் என்று ஆசை இருந்தது. அதற்கு இப்போது அவசியமில்லை. சற்றேறக்குறைய அனைவரும் விருது பெற்றுவி்ட்டார்கள். புதிதாக நான் விருது வழங்க ஒன்றுமே இல்லை.

ட்விட்டரில் நான் பங்குபெற்ற இந்த ஓராண்டில் என்னைக் கவர்ந்த கீச்சர்களை இங்கு பட்டியலிடுகிறேன். அதுவே போதுமென்று தோன்றுகிறது.

1. @arattaigirl சௌம்யா: இவங்களை இந்த ஒரு காரணத்திற்காகத்தான் பிடிக்கும் என்று யாராவது சொல்லிவிட்டால் நான் ட்விட்டரிலிருந்தே விலகிவிடுகிறேன். இவங்களை ஏன் பிடிக்கும்ங்கிறதுக்கான சரியான காரணத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன். பிடித்தது பிடிக்கிறது பிடிக்கும். தமிழ் டிவிட்டரின் செல்லப்பிள்ளை.

2. @writecsk சி.சரவணகார்த்திகேயன்: வணக்கம் ரைட்டர், நீங்க ட்விட்டரில் இருக்க வேண்டிய ஆளே இல்லை.. உங்கள் ஊக்கம் எனக்கு சிரப். மதுமிதா, சந்தியா.. இது கற்பனைக் கதாப்பாத்திரங்களானாலும் அதில் நீங்கள் காட்டும் காதலும் பாசமும் மெய்சிலிர்க்க வைக்கும். எப்போதும் உங்கள் கீச்சுகளுக்கு கருத்துகளுக்கு நான் விசிறி. இளையராஜாவின் இளையமகன், மிஸ்கினின் இன்னொரு சகோதரன், கமலின்ஆகச்சிறந்த விசிறி, அடுத்த ஜெமோ.

3. @writernaayon நாயோன்: என் பிழைகளை எல்லாம் எத்தனை நாகரீகமாக சுட்டிக் காட்டினீர்கள்/கிறீர்கள். உங்கள் மகளதிகார ட்வீட்டுக்கு நான் அடிமை. எதிலும் வித்தியாசத்தை கடைப்பிடிக்க நினைக்கும் உங்கள் தோரணை எனக்கு மிகவும் பிடிக்கும். புதிதாக எடுக்கப்போகும் படத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

4. @thoatta ஆல்தோட்டபூபதி: தோட்டானா தெரியாதவங்க தமிழ் ட்விட்டர்களாகவே இருக்க முடியாதுங்கிறதெல்லாம் பழசு.. தோட்டானா தெரியாத பத்திரிக்கைக்காரர்களே இருக்க முடியாதுன்றதுதான் உண்மை.. நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரம். உங்களிடம் இன்னும் இன்னும் நிறைய எதிர்பார்த்துக்கொண்டேயிருக்கும் ஒரு ரசிகை நான்.

5. @urs_priya Baby Priya: நல்லாயிருக்கீங்களா அக்கா.. உங்களை நான் இதுவரைக்கும் அக்கானே கூப்பிட்டதில்லை. எவ்வளவு அடக்கம், எவ்வளவு பொறுமை, எவ்வளவு நல்ல மனசுங்க உங்களுக்கு. இப்படியும் இருப்பாங்களா யாராவதுனு வியக்கவைக்கும் கள்ளம் கபடமில்லாத செல்ல அக்கா எனக்கு மட்டுமில்ல.. பலருக்கும் (அப்படித்தானே..)

6. @mrithulaM மிருதுளா: என்ன பொண்ணுங்க நீங்க.. என்ன தைரியம், எதையும் கேர் பண்ணிக்காத உங்கள் போக்கு என்னை மிகவும் கவர்ந்தது, கவர்கிறது, கவரும். சந்தின் தைரியமான பெண், ஆரம்பத்திலிருந்தே என்னை மிகவும் கவர்ந்த ஒரு பெண் கீசசர் நீங்க.

7. @Alexxious Dream Merchant: வணக்கம் டாக்டர். இன்னும் எப்படியெல்லாம் உங்களால வார்த்தைகளில் விளையாடமுடியும்.. எதையும் மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கும் உங்கள் சாதூர்யம் என்னை மிகவும் கவர்ந்தது. எத்தனை திறமையான உங்களுக்கு ஃபாலோயர்ஸ் ரெம்ப கம்மி. என்ற வருத்தம் எனக்கு எப்பவும் இருக்கும்.

8. @iKaruppiah Wayfarer: வணக்கம் கருப்பு, உங்கள் கவிதைகளை ரசிக்காதவர்கள் யாருமே இந்த சந்தில் இருக்கமுடியாது. பிள்ளைகள் உறங்க அடம் பிடிக்கும் போதெல்லும் கண்விழித்தாக வேண்டும். அப்போதெல்லாம் உங்கள் கவிதைகள் எனக்கு நல்ல விருந்து. உங்கள் புத்தகத் தேடல் என்னை மிகவும் கவர்ந்தது.

9. @guzhali_ குழலி: நந்தினிங்கற பேரில் இருக்கும்போதிலிருந்தே  நீங்க எழுதின கவிதைகளெல்லாம் நான் நிறைய ரசித்திருக்கிறேன். இன்னொரு கொஞ்சும் ரசனையான குழந்தை. வாய்ப்புக் கிடைத்தால் உங்க கிளாஸ் ஒருநாள் அட்டன்ட் பண்ணனும். குரல் மட்டுமல்ல மனதும் குழந்தைத்தனம்தான். ஆனால் உண்மையில் நீங்க ரெம்ப போல்டான பொண்ணு. ரெய்னா மாதிரியே ஒரு பையன் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.

10. @Tparavai தமிழ்ப்பறவை: பரணி சார், இளையராஜா உங்களுக்கு என்ன சார் தந்தார்.. உங்க விரல்களில் அப்படி என்ன இருக்கு உங்களுக்கு மட்டும்  ஓவியங்கள் அடிமையோ?! இசைமீது உங்களுக்கு இருக்கும் ஆர்வம் உங்கள் மகளுக்கு தமிழிசை என்று பெயர் வைத்ததிலிருந்தே தெரிகிறது. உங்கள் ஒவியத் திறமைக்கு என் வணக்கங்கள். நீங்கள் இந்தத்துறையில் மென்மேலும் வளரணும்.

இது முதல் 10 மட்டும்தான்.. கீழே நான் குறிப்பிடும் உங்கள் ஒவ்வொருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களைப் பற்றியும் விரிவாக எழுதமுடியும் ஆசைதான். சந்தர்ப்பம் வரும்போது எழுதுகிறேன்.

11. @manipmp Sappani 

12. @indirajithgyru அண்ணாமலை

13. @itzNandhu நந்தினி

14. @Sricalifornia Sri

15. @Rasanai Astro'Nut'

16. @Rajakumaari The Princess

17. @RaZkoLu ராஸ்கோலு

18. @araathu அராத்து

19. @arivucs அறிவு

20. @ashoker_UHKH @$#0K

21. @yamunaS யமுனா (எங்க போயிட்டீங்க?)

22. @senthilcp சி.பி. செந்தில்குமார்

23. @vilambaram அண்ணே! ஒரு விளம்பரம்

24. @puthagappuzhu வினோத்

25. @Sowmi _சௌமி

26. @minimeens டேனியப்பா

27. @sweetsudha1 மின்னல் சுதா

28. @Elanthenral இளந்தென்றல்

29. @anu_twits அன்புடன் அனு

30. @2nrc ravichan

31. @kanaprabha கானா பிரபா

33. @iindran பொர்க்கி (பால்வீதி)

34. @raajaacs Raajaachandrasekar

35. @RavikumarMGR ட்விட்டர்MGR

36. @kattathora கட்டதொர

37. @iKrishS கிருஷ்குமார்

38. @vandavaalam காக்கை சித்தர்

39. @settusays பஜன்லால் சேட்டு

40. @ThiruttuKumaran திருட்டுகுமரன்

41. @RajanLeaks Rajan

42. @Tottodaing வேல்

43. @navin Naveen Kumar

45. @umakrishh உமாகிருஷ்

46. @iamkarki கார்க்கிபவா

47. @Sakthivel_twitt சேந்தன் அமுதன்

48. @kolaaru கடவுள்

49. @gpradeesh Pradeesh

50. @kalasal வந்தியத்தேவன்

51. @Rjcrazygopal கோ என்கிற கோபால் 

52. @freeyavudu மாமே

53. @dpriya_ சத்யவதி

54. @KalaiLalitha கலைலலிதா

55. @iAgarshana மகள்

56. @_ivak அறுந்த வாலு

57. @amas32 Sushima sekar

58. @saichithra sai

59. @nchokkan என்.சொக்கன்

60. @rajinirams N.ரஜினிராமச்சந்திரன்

61. @lathamagan பொர்க்கி போயட்டு

62. @talkativewriter Prathipa 

63. @altappu பிரம்மன்

64. @saranyaajira saranya (இப்போ இவங்க ட்விட்டரில் இல்லை) 

இவர்களெல்லாம் என்னைக் கவர்ந்தவர்கள்தான். ஆனால் திறமைான பல கீச்சர்கள் இன்னும் நிறையப்பேர் இருக்காங்க.. அவங்களை புரிஞ்சுக்கிட்டு அடுத்த சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்..:-)

எப்பவோ எதுக்காகவோ தொடங்கிய ப்ளாக் இதுக்காகவாவது பயன்பட்டுச்சே..:-))

இனிமே நான் அடிக்கடி ப்ளாக் அப்டேட் குடுப்பேன்னு நினைச்சி ஏமாந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல..:-))

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

- சுடர்கொடி

(பி.கு இது வரிசைப்படி எழுதியது அல்ல.. எண்களுக்கும் வரிசைக்கும் சம்மந்தமில்லை )

Saturday 20 April 2013

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே..!



நம் காதல் திருவிழாக்கள்
நடந்து அரங்கேறிய அந்த வேளையில்
தனிமையில் நீயும் நானும்
ஒருவரையொருவர்
உற்று நோக்கிக் கொண்டிருந்த தருணம்
நம் பார்வை அம்புகள் ஒருவரையொருவர்
துளைத்துக் கொண்டிருந்தன

தூரத்தில் கேட்கும் இசையெல்லாம்
சங்கீதமாய் ஒவ்வொன்றும்
நமக்காகவே எழுதப்பட்ட வரிகளாய்
எனக்குள்ளும் உனக்குள்ளும்
இன்பத்தை எழுப்பிக் கொண்டிருந்தன

நம் காதல் ஐயங்களுக்கு
விழியாலே விழிக்கு
விளக்கம் சொல்லிக்கொண்டு
உன்னழகை நானும் என்னழகை நீயும்
ஒருவருக்கொருவர்
அளந்து கொண்டிருந்தோம்

ஊதக்காற்று நம் காதுக்குள்
ஏதோ சொல்ல எத்தனிக்க
அர்த்தம் விளங்கியதாய்
இருவரும் எழுந்து நடக்கத் தொடங்கினோம்
விளக்கணைக்க

அணைந்தது விளக்காயினும்
ஒளிர்ந்தது இருளில் பட படக்கும்
வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள்
அறைக்குளும் நம் நெஞ்சிற்குள்ளும்..!

Sunday 10 March 2013

மயக்கம் என்ன..!






வாகன இரைச்சல்
வானத்தின் இறைச்சல்
இருந்தும் நீ தூக்கத்தில் உளறும்
என் பெயரின் சத்தம்
என் செவி மடல்களில்
தெள்ளத் தெளிவாய்க் கேட்கிறதே..!

எங்கோ போகும் ரயில் சத்தம்
உன் நித்திரை கலைத்திருக்கக்கூடும்
ஒரு கணம் இமை குறுக்கி நிமிர்த்தினாய்
ரயிலைத் திட்டத்தான் தோன்றியது
பாவம் அது என்ன செய்யும்
பிழைத்துப் போகச்சொல்லி
மன்னித்து விட்டுவிட்டேன்..!

என்ன இது திடீரென்று
உன் மூச்சுக்காற்றில்
குளுமை கலந்து வருகிறதே ஏன்?
ஒருவேளை உன் கனவிலிருந்து
என் நினைவுகள்
கலைந்துவிட்டனவோ..!
உன் மூச்சுக்காற்றில் குளிர் காய்ந்த
தென்றல்கூட
காத தூரம் சென்றோடிவிட்டது.

கலாபனே ஏனடா
என்னைக் காதலித்தாய்
இன்று நீ உறங்குகிறாய்
உழைப்பின் களைப்பால்
நானோ கிறங்குகிறேன்
உன்தன் நினைப்பால்..!

நீ தழுவி எனக்கிட்ட முத்தச்சுவடு
காயுமுன் உறக்கம்
உன்னைத் தழுவிவிட்டதோ
எனக்கு மட்டும்தான் தெரியும்
நான் உன் பிள்ளையைச் சுமக்கிறேன்
நீ உறக்கத்தில் என்னையும் சேர்த்து
சுமக்கிறாயென்று..!

- சுடர்க்கொடி